காக்கைக்கும்.....
October 24, 2009
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு - ரொம்ப சாதாரணமா, நாம அடிக்கடி சொல்ற இல்ல கேக்கற ஒரு வார்த்தை தான்...
மேம்போக்கா பார்த்தா... 'எப்படி இருந்தாலும் தாய்க்கு தன் குழந்தை உசத்தி தான்' ங்கற அர்த்தம் வந்தாலும், 'அவங்க அவங்க பொருள் (குழந்தையோ, பொம்மையோ, வேறு எதுவோ...)அவங்க அவங்களுக்கு உசத்தி தான் ' ங்கறதும் அர்த்தம்....
இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்... ஆனா...
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு - ன்னு சொல்லாம, காக்கை க்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு ன்னு ஏன் சொல்றாங்க - ன்னு போன வாரம் தான் எனக்கு தெரிஞ்சுது...
இதுக்கு நான் ரூம்லாம்போட்டு யோசிக்கலங்க... எங்க வீட்டு மரத்த சும்மா அண்ணாந்து பாத்துட்டு இருந்தேன்.. அதில ஒரு காக்கா கூடு இருந்துச்சு.. என்னமோ தெரியுதேன்னு கொஞ்சம் எட்டி பாத்தப்ப தான்...இந்த அரிய சிந்தனை எனக்கு வந்துச்சு....
சாதாரணமா நாய்க்குட்டி, ஆட்டுக்குட்டி, மாட்டுக்குட்டி... சாரி .. கன்னுக்குட்டி, புலிக்குட்டி, கரடிக்குட்டி, ன்னு விலங்குகளின் குட்டிகளை பார்த்தாலே தூக்கிவெச்சு கொஞ்ச தோணும், குறைஞ்சபட்சமாய் தடவியாவது கொடுக்க தோணும்... ஆனா... இந்த காக்கா குஞ்ச பார்த்தா... அய்ய.. ச்சீ..ச்சீ.. உவ்வே... என்றேல்லாம் சொல்லி முகத்தை திருப்பிக்கொள்வோம்.....
நிஜமா சொல்றேன்ங்க... அவ்வளவு மோசம்... ஒரே வார்த்தையில் சொல்லனும்னா... காக்காய் கொள்ளை அழகுங்க....
உவமான உவமேயத்தையும் நம்ம முன்னோர்கள் நல்லாதான் சொல்லியிருக்காங்க....ன்னு அப்பத்தான் எனக்கு தோணுச்சு.... அத அப்படியே உங்ககிட்ட பகிர்ந்துக்கலாமேன்னு....