உதிரிப்பூக்கள் – செப் 25, 2010
September 25, 2010
கப்பலேறிப்போயாச்சு….
வேற எதும் இல்ல.. நம்ம நாட்டோட மானம் தான்.. காமன்வெல்த் போட்டிகள் நடத்துவதில் ஊழல் செய்து மற்ற நாடுகளுக்கு முன் நம்மை தலைநிமிரமுடியாமல் செய்துவிட்டார்கள்…..
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகுவதாக பல வீர்ர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த மாதிரி போட்டியில் இருந்து எல்லோரும் விலகிவிட்டால் எல்லா விளையாட்டிலும் நாமே ஜெயித்து,(!!!) நாமே பரிசை அள்ளலாம் என்று எண்ணுகிறார்கள் போலும்…
என்ன கொடுமை சரவணா…?
தஞ்சை பெரிய கோவில் – 1000ஆவது ஆண்டு விழா…
ஆயிரம் ஆண்டுகள்.. அடேங்கப்பா… எண்ணவே மலைக்கிறது… இக்காலத்தில் கல்லையும், மண்ணையும் வைத்து ஒரு வீடு கட்டுவதற்கே கண்ணைக் கட்டுகிறதே… போக்குவரத்து வசதிகளோ, மற்ற வசதிகளோ இல்லாத அந்த காலத்திலேயே இவ்வளவு பெரிய கற்கோவிலை கட்டிய ராஜராஜ சோழனை கையெடுத்து வணங்கத்தோன்றுகிறது….
சரித்திரத்தில் சாகாவரம் பெற்று விட்ட அம்மன்ன்னை நினைத்தால் மேனி சிலிர்க்கிறது...
நம்மால் கட்டமுடிகிறதோ இல்லையோ, கோவிலை பராமரிக்கவாவது செய்வோம்...
விளம்பரங்கள்...
வோடஃபோன் – ப்ளாக்பெரிக்கான ’we are blackberry boys’ விளம்பரம் அருமையாக உள்ளது… எல்லோரும் உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை சொல்லும் விதம் அழகு…
இன்னும் பார்க்கவில்லை என்றால் அவசியம் பார்க்கவும்….
மொக்கை விளம்பரங்கள்….
பொம்மிஸ் ;நைட்டீஸ் விளம்பரம்…
ஒரு இல்லத்தரசியாய் என்னை உணரவைப்பது பொம்மிஸ் ;நைட்டீஸ் என்று caption வேறு….
இல்லத்தரசி முன்னால் வந்தால் சூடான விவாதமெல்லாம், மாறிவிடுகிறதாம்….
ஸ்… ப்பா…. முடியல….