காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

இந்த வாரம்!!! இலங்கைத் தமிழர் வாரம்!!!

October 29, 2008

அரசியலில் ஒவ்வொரு வாரமும் ஒரு special இருக்கும் . Sun TVயின் திரைப்படங்களைப் போல. அதில் இந்த வாரம் இலங்கைத் தமிழர் வாரம் போலிருக்கின்றது .

  • சென்னையில் மனித சங்கிலி போராட்டமாம்
  • ராமேஸ்வரத்தில் கண்டன பேரணியாம்!! அதைத் தொடர்ந்து சிலர் கைதாம் !!! அறிக்கையாம்!!!
  • latest ஆக அதில் நிதி திரட்டாம்!!! ஆளுக்கு 50,000மாம்!!! ஒரு நாள் சம்பளமாம்!!!

நிற்க... (படிப்பவர்கள் எழந்து நிற்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. விஷயம் அப்படி இருக்க, என்று அர்த்தம் )

இலங்கையில் அப்படி என்னதான் பிரச்சனை. எதற்காக இப்படி அடித்துக் கொள்கிறார்கள்?

நான் விசாரித்தவரையில் யாருக்கும் முழுசாய் தெரியவில்லை!!! உங்களில் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்!!!

பிரச்சனை என்னவாயினும், அதை அரசியல் ஆக்கவே இங்கு பெரு முயற்சிகள்நடக்கின்றது...

ஒரு உதாரணம் இங்கே!!

MPக்களின் ராஜினாமா... யாருக்காகவோ தங்கள் பதவியை தானம் செய்யும் அளவிற்கு நம் MPக்கள் தியாக சீலர்கள் இல்லை... அதை அனுமதிக்கும் அளவிற்க்கு நம் முதல்வரும் இல்லை...

ஒருவேளை இன்னும் இரண்டு வாரக் கெடுமுடியவில்லை போலும்!!எப்படியும் அது இன்னும் 20 வருடங்களுக்காவது முடியாது...

Read more...

சந்திராயனும்... கமல்ஹாசன் படங்களும் II

October 22, 2008

ஹாலிவுட் படங்களை பார்த்து, அது நமக்கு (நம்ம ஊருக்கு) எப்படி இருக்கும் என்று யோசிக்காமல் அந்த படத்தை , அப்படியே உல்டா செய்வது......

ISRO வும் அதையே செய்கிறது....

Read more...

சந்திராயனும்... கமல்ஹாசன் படங்களும்

சென்னை : சந்திராயன்-1 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது இந்தியா...

ஓவ்வொரு இந்தியனும் பெருமைப்படவேண்டிய விஷயம் என்று எல்லா மீடியாக்களும் மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றன...Being an Electronics Engineer, personally I don't feel like that...கமலின் படங்கள் போன்று இருக்கிறது இது.... Technically high ஆக இருக்கும். ஆனால் பாமரனுக்கு அதில் ஒன்றும் புரியாது. தயாரிப்பாளருக்கு ஏகப்பட்ட நஷ்டம். வியாபாரரீதியாக படம் ஊற்றிக்கொள்ளும். ஆனால் தொழில்நுட்பரீதியாக பெருமைகொள்ளவேண்டிய படம் அது...

அதேபோல் சந்திராயனும்...
பாமரனுக்கு அதில் ஒன்றும் பலனில்லை...
தயாரிப்பாளருக்கு (அரசாங்கத்துக்கு) ஏகப்பட்ட செலவு...ஆனால் தொழில்நுட்பரீதியாக பெருமைகொள்ளவேண்டிய விஷயம்.



Read more...

Materiallistic பக்தி....

October 11, 2008

சமீபத்தில கோவிலுக்கு போயிருந்தேன்...

மனிதர்களை வேடிக்கை பார்ப்பதைக் காட்டிலும் ஒரு நல்ல பொழுதுபோக்கு இருப்பதாய் எனக்கு தெரியவில்லை...

பலர் என்ன செய்யறாங்கன்னா... பிரகாரம் தோறும் சுற்றுகிறார்கள்... சன்னதி தோறும் விளக்கு போடுகிறார்கள்... ஆனா.. அதே சமயம் cellphone la பேசவும் செய்கிறார்கள்...

அது ஒன்னும் ரொம்ப முக்கியமான calla கூட இருக்காது... ஆனா.. கனகாரியமா அதை attend செய்வார்கள்...

கோவில் என்பது என் வேண்டுதல்களை சொல்லும் இடம் மட்டுமே.... அங்கே நான் யாதொறு விதிகளையும் கடைபிடிக்க மாட்டேன் என்ற எண்ணமே பெரும்பாலோரிடம் உள்ளது...

இந்த generation modern day கடவுள்கள் எவ்வளவோ சகித்து கொள்கிறார்கள்... அதில் இந்த cellphone பக்திமான்களும் அடக்கம்...

Read more...

சண்டிகேஸ்வரர் - டிரெடிஷனல் செக்யூரிட்டி GOD

எல்லா கோவில்களிலும் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கும்... அம்பாள் சன்னதிக்கு எதிரிலோ அல்லது தனியாகவோ இருக்கும்.... அங்கே போனதும் சிலர் கைதட்டிவிட்டு வருவார்கள்... இன்னும் சிலர் அவங்க டிரஸ் ல இருந்து ஒரு நூல உருவி போடுவாங்க... அப்படி நூல போட்டுட்டு வந்தா நிறைய புது டிரஸ் கெடைக்கும்னு சொல்லுவாங்க...

ஆனா உண்மையில சண்டிகேஸ்வரர் அந்த கோவிலின் பாதுகாப்பாளர். அவர்கிட்ட, நான் இந்த கோவில இருந்து போகும் போது எதையும் எடுத்துட்டு போகலைன்னு சொல்ற ஒரு வழி தான் அது... இரு கைகளையும் தட்டி , அதுல ஒன்னும் இல்லன்னு சொல்றது...

கைதட்டாம நூல ஏன் போடறாங்கன்னா... ? சண்டிகேஸ்வரர் தியானத்தில் இருப்பதாகவும் அவரை தொந்தரவு செய்யாமல் , அதே சமயம் சொல்லிட்டு போகனும்னு நூல போடறது....

Traditional method off putting attendance it seems

Read more...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP