காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

சந்திராயனும்... கமல்ஹாசன் படங்களும்

October 22, 2008

சென்னை : சந்திராயன்-1 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது இந்தியா...

ஓவ்வொரு இந்தியனும் பெருமைப்படவேண்டிய விஷயம் என்று எல்லா மீடியாக்களும் மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றன...Being an Electronics Engineer, personally I don't feel like that...கமலின் படங்கள் போன்று இருக்கிறது இது.... Technically high ஆக இருக்கும். ஆனால் பாமரனுக்கு அதில் ஒன்றும் புரியாது. தயாரிப்பாளருக்கு ஏகப்பட்ட நஷ்டம். வியாபாரரீதியாக படம் ஊற்றிக்கொள்ளும். ஆனால் தொழில்நுட்பரீதியாக பெருமைகொள்ளவேண்டிய படம் அது...

அதேபோல் சந்திராயனும்...
பாமரனுக்கு அதில் ஒன்றும் பலனில்லை...
தயாரிப்பாளருக்கு (அரசாங்கத்துக்கு) ஏகப்பட்ட செலவு...ஆனால் தொழில்நுட்பரீதியாக பெருமைகொள்ளவேண்டிய விஷயம்.7 கருத்துகள்:

எஸ்.கே said...

"சந்திரயான்" என்று திருத்தவும். அதாவது சந்திரனை நோக்கிய பயணம் என்னும் பொருள் கொள்கிறது.

மேலும் இந்த செயற்கைக் கோள் சந்திரனின் மேல்பரப்பிலிருந்து ஹீலியம் 3-ஐப் பெற்று வரும் என்கிறார்களே!

உங்கள் கருத்துக்கு ஒரு மாற்றுக் கருத்தை இங்கு வாசித்து பின் உங்கள் எதிர்வினையை தெரிவியுங்களேன்!

எஸ்.கே

Swarnarekha said...

சந்திரனின் மேல்பரப்பிலிருந்து ஹீலியம் 3-ஐப் பெற்றுவருவது என்பது புதியது அல்ல, சந்திரனைப் பற்றிய ஆராய்ச்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே உள்ளது அது. மேலும் சந்திரனைப் பற்றிய ஆராய்ச்சி என்பது அமெரிக்காவும் ரஷ்யாவும் நிலவில் கால்பதித்த நாளில் இருந்து பெரும் முன்னேற்றத்தை கண்டு விடவில்லை!! ஏறக்குறைய 30 ஆண்டுகளாக அதே நிலையில் தான் உள்ளது. எனவே விண்வெளி அறிவியலில் நம் அந்தஸ்த்தை நிலைநிறுத்த ஒரு costly யான விஷயமே இது என்பது என் தாழ்மையான எண்ணம்.

Anonymous said...

Good Work lady..

Bheema said...

விண்வெளி ஆராய்ச்சி மற்றும் திட்டங்களில் எப்போதும் நேரடியான பலன் ஒன்றே ஒன்று தான். இலக்கை எட்டுவது. அது சந்திரனோ அல்லது செவ்வாயோ. ஆனால் அதன் மறைமுக பலன்கள் அபாரமானவை. உதாரணம், அக்னி ஏவுகணையில் பயன்படுத்தப்பட்ட ஒரு பொருள் பின்னர்ஊனமுற்றோர்க்கான உபகரணங்களை மேம்படுத்த மிகவும் உதவியது. இது ஒரு நேர் எதிரான பாதை போல. ஒரு திட்டம் முடிந்ததும் அதில் இருந்து பல்வேறு பலன்கள்,மறு நுழைவு நுட்பங்கள்(re-engineering) கிடைக்கும்.

காற்றில் ஆக்ஸிஜன் போல் பொறியியலில் விண்வெளி ஆராய்ச்சி.

ஸ்வர்ணரேக்கா said...

அக்டோபர் மாசம் நான் எழுதினதை தேடி படிச்சதோட, பின்னூட்டமும் போட்டதுக்கு, நன்றிகள் பல....

Bheema said...
This comment has been removed by the author.
Bheema said...

உங்கள மாதிரியே அங்கலாய்க்கிற இன்னொரு கட்டுரை.. உங்களுக்குப் போட்டியாகவும் கிளம்பிட்டாங்க :) :)


http://solvanam.com/?p=4130

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP