காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

பாராட்டு... (சர்வேசன் 500 - "நச்"னு ஒரு கதை - 2009 -போட்டிக்கு)

November 10, 2009

'ஸ்ரீமதி...'
'ஸ்ரீ..மதி...'
'ஏய்... ஸ்ரீமதி...'
'ப்ச்.. என்னம்மா...?'
'இங்கதான் இருக்கியா... நைட்டுக்கு என்ன செய்யட்டும்.. இட்லியா, சப்பாத்தியா..?'
'எதுனா செய்யி... '

என்ன ஆச்சு இவளுக்கு... நைட்டுக்கு என்ன செய்யட்டும். ன்னு கேட்டா... நாம கேட்கற ரெண்டும் இல்லாம வேற எதுனா சொல்லுவா.... இப்ப என்னடான்னா... எதுனா செய்யின்னு சொல்றாளே...

ஸ்ரீமதி - கவிதா, ராகவனின் செல்ல மகள்.. அப்பாவிடம் ஒட்டுதல் ஜாஸ்தி.. ராகவனுக்கும் தன் செல்ல மகளிடம் பிடிப்பு அதிகம்.. அவ அவங்கப்பா செல்லம் என்று சந்தோஷமாக சலித்துக்கொள்பவள் கவிதா.. அப்பா திட்டினாலோ, ஏதும் சொல்லிவிட்டாலோ ஸ்ரீமதி முகத்தை தூக்கிவைத்துக்கொள்வாள்.. அம்மா சொன்னாலோ... 'போம்மா.. நீ... வேற வேலையில்லை உனக்கு' என்று சொல்லிவிட்டு ஓடுவாள்...

'என்னடா ஆச்சு.. ஃப்ரண்ட்ஸ் கூட சண்டையா... ஏன் உம்முன்னு இருக்க...'

'ஒண்ணுமில்ல மா...'

சரி.. கேட்டா எப்படியும் சொல்லமாட்டா.. கொஞ்ச நேரம் கழிச்சு அவளே சொல்லுவா.. என்று எண்ணியபடி சமையலில் மூழ்கினாள் கவிதா..

'ஸ்ரீ.. வா.. சூடா வந்து சாப்பிடு.. வா.. வா' - கவிதா அழைக்க.. வழக்கம்போல் கிச்சன் திட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு, சாப்பிட ஆரம்பித்தவள்.. ரெண்டு வாய் வைத்ததும் பட பட வென்று சொல்ல ஆரம்பித்தாள்..

'பாரும்மா இந்த அப்பாவ.. நீ நேத்து காலைல அத்தை வீட்டுக்கு போய்ட்டீல்ல.. நானும்... ஞாயித்துக்கிழமை நமக்கு லீவாச்சே... நாமளே செய்வோம்ன்னு ..
மதியம், ஃபரைடு ரைஸ், சாலட்.., நைட்டுக்கு - ரவா தோசை, அதுக்கு தொட்டுக்க தக்காளி சட்னி, தேங்காய் சட்னி ன்னு பாத்து பாத்து செஞ்சம்மா.. ஆனா இந்த அப்பா... எல்லாத்தையும் சாப்பிட்டு நல்லாவே இல்லைன்னு என்ன திட்டறாரும்மா..' என்று குற்றபத்திரிக்கை வாசித்தாள்

அவராவது.. இவளை திட்டறதாவது, என்று நினைத்துக்கொண்டவளாய் ...

'கஷ்டப்பட்டு செஞ்ச பிள்ளைய பாராட்டாம திட்டறாரா.. உங்க அப்பா.. வரட்டும் பாத்துக்கலாம்.. நீ போய் படிடா..' என்று ஆறுதல் படுத்தினாள்..

சற்று நேரம் கழித்து வந்த ராகவனிடம் கவிதா... 'ஏங்க இன்னிக்கு இவ்ளோ லேட்டு...சரி சரி.. கை கழுவிட்டு வாங்க.. சாப்பிடலாம்' என்று அழைத்தாள்..

'ஆமா.. இன்னிக்கு என்ன மெனு... உப்பு ஒரப்பு இல்லாம ஒரு குழம்பு, தீஞ்சுபோன தோசைன்னு எதுனா செஞ்சிருப்பியே... நீயெல்லாம் என்ன சமைக்கற.. நேத்து எம் பொண்ணு செஞ்சா பாரு சட்னியும், தோசையும்... ம்... அதுவல்லவோ சுவை... அதுவல்லவோ கை மணம்..'

'ம்.. இதென்ன புதுக்கதையா இருக்கு... அவ செஞ்சது நல்லாயில்லன்னு நீங்க திட்டினதா இல்ல சொல்லிக்கிட்டு இருந்தா... '

'ஸ்ரீ. இங்க வந்து உங்க அப்பாவ என்னன்னு கேளு' என்று உள்ளறையில் இருந்த ஸ்ரீமதியைக் கூப்பிட..

'டேய்.. நான் எங்கடா உன்ன திட்டினேன்... '

'பின்ன.. நான் செஞ்சதையெல்லாம் .. அம்மா செய்யற மாதிரியே இருக்குன்னு சொன்னியேப்பா... உனக்குத்தான் அம்மா செய்யறதே பிடிக்காதே...

24 கருத்துகள்:

GEETHA ACHAL said...

Superb story...All the best...

Prasanna said...

ரொம்ப இயல்பா நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள் :)

Unknown said...

நல்லா இருக்கு.முடிவு யூகிக்க முடியவில்லை.

Anonymous said...

ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

R.Gopi said...

க‌தையும், முடிவும் ந‌ல்லா இருக்கு ஸ்வ‌ர்ண‌ரேக்கா....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்க‌ள்....

CS. Mohan Kumar said...

என்னால் இந்த கதையில் ஒன்ற முடிந்தது காரணம். எங்களுக்கும் ஒரே பெண். அவள் எனது செல்லம் தான்.

நன்றாக எழுதி உள்ளீர்கள்

வாழ்த்துக்கள்
*******
கதை போட்டி களத்தில் நானும் குதித்துள்ளேன். “அடுத்த வீட்டு பெண்” கதை படிக்க எனது blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/

Beski said...

ஹி ஹி ஹி... நல்லாயிருக்கு.

வாழ்த்துக்கள்.

சிங்கக்குட்டி said...

ரொம்ப இயல்பான குடும்ப ஆண்களின் மனநிலை.

நல்லா இருக்கு ஸ்வர்ணரேக்கா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஸ்வர்ணரேக்கா said...

@எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்
@மோகன் குமார்
@கோபி
@சின்ன அம்மிணி
@ராம்குமார் - அமுதன்
@ரவிஷங்கர்
@பிரசன்ன குமார்
@கீதா
@சிங்கக்குட்டி


வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க...

CS. Mohan Kumar said...

Are you from Trichy? I studied in Trichy for 7 years. My sister who is a doctor is in trichy. Pl. send me a mail if possible to mohan.kumar@allsectech.com

Thanks

Mohan Kumar

http://veeduthirumbal.blogspot.com

vinthaimanithan said...

அடடா! இப்போதான் உண்மைத்தமிழனின் கதைக்கு பின்னூட்டிட்டு இங்க வந்தா... ஆளாளுக்கு பிச்சி உதர்றீங்களேப்பா.ஆனாலும் திவ்யாவுக்கு குசும்பு ஜாஸ்திங்கோவ்!

Kavinaya said...

ச்வீட்! கதை 'நச்'ன்னுதான் இருக்கு :)
வெற்றி பெற வாழ்த்துகள் ஸ்வர்ணரேக்கா.

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க செந்தழல் ரவி.. நன்றிங்க..

வாங்க விந்தைமனிதன்..
//பிச்சி உதர்றீங்களேப்பா...// நெசமாவா சொல்றிங்க.. நன்றி..நன்றி..
//திவ்யாவுக்கு// இல்லை..இல்லை அது ஸ்ரீமதி..

ஹாய் கவி..
//ச்வீட்! கதை 'நச்'ன்னுதான் இருக்கு//
ரொம்ப நன்றிப்பா..

பூங்குன்றன்.வே said...

நான் கூட கதையில் ஒன்றி படிக்கும்போது உங்க அப்பா நிஜமாதான் திட்டினாரோ! என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே முடிவை படித்தால் அங்கே தெரிந்தது உங்கள் டச்.அருமை !!!

sathishsangkavi.blogspot.com said...

வாவ்..... இது நல்லா இருக்கே..........

வாழ்த்துகள் ஸ்வர்ணரேக்கா.

cdhurai said...

பதிவுலகில் முத்திரை பதித்துவரும் அன்பரே,

இந்த பதிவுலகிற்கு புதியவன் ஒரு காதல் கதை எழுதியுள்ளேன்..தங்களது ஆதரவை விரும்பி, தங்களே எனது வலைக்கு அழைக்கிறேன்….

http://idhayame.blogspot.com/2009/11/blog-post_12.html

அன்புடன்

செல்லத்துரை…..

கா.கி said...

முடிவு யூகிக்க முடியலை. ஆனா, இது ஏதோ ஒரு கடி ஜோக், sms ஜோக் மாதிரி இருக்கு. இருந்தும், கதையாக்கின விதம் நல்லா இருந்துது.
வாழ்த்துக்கள்...

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க சங்கவி...
//இது நல்லா இருக்கே//
ரொம்ப ரொம்ப நன்றிங்க..

வாங்க பூங்குன்றன்..
//அங்கே தெரிந்தது உங்கள் டச்.அருமை//
thank u thank u..

வாங்க Karthick Krishna..
//இது ஏதோ ஒரு கடி ஜோக், sms ஜோக் மாதிரி இருக்கு. இருந்தும், கதையாக்கின விதம் நல்லா இருந்துது//

வாழ்த்துக்கும்.. விமர்சனத்திற்கும் நன்றி.. இன்னும் நல்லா எழுத ட்ரை பண்றேன்ங்க..

முதல் முறையாக வந்த அனைவரையும்..மீண்டும் மீண்டும் வந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்..

(இடைத்தேர்தல் நியூஸ்லாம் படிச்சு படிச்சு, கொஞ்சம் அரசியல் டச் வந்திருச்சு..ஹி.. ஹி..)

ஸ்வர்ணரேக்கா said...

// பதிவுலகில் முத்திரை பதித்துவரும் அன்பரே//

நெசமாத்தான் சொல்றீங்களா....

நம்மள வெச்சு காமெடி பண்ணலயே..

கண்டிப்பா வரேன்... கவலையே படாதீங்க...

ஷங்கி said...

அற்புதமா வந்திருக்கு. வாழ்த்துகள்.

Anonymous said...

so cute......
ungakita erunthu neriya ethir parkiren..

Nandri Valaga Valamudan.

Angu said...

sema punch..keep going..

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP