'ஸ்ரீமதி...'
'ஸ்ரீ..மதி...'
'ஏய்... ஸ்ரீமதி...'
'ப்ச்.. என்னம்மா...?'
'இங்கதான் இருக்கியா... நைட்டுக்கு என்ன செய்யட்டும்.. இட்லியா, சப்பாத்தியா..?'
'எதுனா செய்யி... '
என்ன ஆச்சு இவளுக்கு... நைட்டுக்கு என்ன செய்யட்டும். ன்னு கேட்டா... நாம கேட்கற ரெண்டும் இல்லாம வேற எதுனா சொல்லுவா.... இப்ப என்னடான்னா... எதுனா செய்யின்னு சொல்றாளே...
ஸ்ரீமதி - கவிதா, ராகவனின் செல்ல மகள்.. அப்பாவிடம் ஒட்டுதல் ஜாஸ்தி.. ராகவனுக்கும் தன் செல்ல மகளிடம் பிடிப்பு அதிகம்.. அவ அவங்கப்பா செல்லம் என்று சந்தோஷமாக சலித்துக்கொள்பவள் கவிதா.. அப்பா திட்டினாலோ, ஏதும் சொல்லிவிட்டாலோ ஸ்ரீமதி முகத்தை தூக்கிவைத்துக்கொள்வாள்.. அம்மா சொன்னாலோ... 'போம்மா.. நீ... வேற வேலையில்லை உனக்கு' என்று சொல்லிவிட்டு ஓடுவாள்...
'என்னடா ஆச்சு.. ஃப்ரண்ட்ஸ் கூட சண்டையா... ஏன் உம்முன்னு இருக்க...'
'ஒண்ணுமில்ல மா...'
சரி.. கேட்டா எப்படியும் சொல்லமாட்டா.. கொஞ்ச நேரம் கழிச்சு அவளே சொல்லுவா.. என்று எண்ணியபடி சமையலில் மூழ்கினாள் கவிதா..
'ஸ்ரீ.. வா.. சூடா வந்து சாப்பிடு.. வா.. வா' - கவிதா அழைக்க.. வழக்கம்போல் கிச்சன் திட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு, சாப்பிட ஆரம்பித்தவள்.. ரெண்டு வாய் வைத்ததும் பட பட வென்று சொல்ல ஆரம்பித்தாள்..
'பாரும்மா இந்த அப்பாவ.. நீ நேத்து காலைல அத்தை வீட்டுக்கு போய்ட்டீல்ல.. நானும்... ஞாயித்துக்கிழமை நமக்கு லீவாச்சே... நாமளே செய்வோம்ன்னு ..
மதியம், ஃபரைடு ரைஸ், சாலட்.., நைட்டுக்கு - ரவா தோசை, அதுக்கு தொட்டுக்க தக்காளி சட்னி, தேங்காய் சட்னி ன்னு பாத்து பாத்து செஞ்சம்மா.. ஆனா இந்த அப்பா... எல்லாத்தையும் சாப்பிட்டு நல்லாவே இல்லைன்னு என்ன திட்டறாரும்மா..' என்று குற்றபத்திரிக்கை வாசித்தாள்
அவராவது.. இவளை திட்டறதாவது, என்று நினைத்துக்கொண்டவளாய் ...
'கஷ்டப்பட்டு செஞ்ச பிள்ளைய பாராட்டாம திட்டறாரா.. உங்க அப்பா.. வரட்டும் பாத்துக்கலாம்.. நீ போய் படிடா..' என்று ஆறுதல் படுத்தினாள்..
சற்று நேரம் கழித்து வந்த ராகவனிடம் கவிதா... 'ஏங்க இன்னிக்கு இவ்ளோ லேட்டு...சரி சரி.. கை கழுவிட்டு வாங்க.. சாப்பிடலாம்' என்று அழைத்தாள்..
'ஆமா.. இன்னிக்கு என்ன மெனு... உப்பு ஒரப்பு இல்லாம ஒரு குழம்பு, தீஞ்சுபோன தோசைன்னு எதுனா செஞ்சிருப்பியே... நீயெல்லாம் என்ன சமைக்கற.. நேத்து எம் பொண்ணு செஞ்சா பாரு சட்னியும், தோசையும்... ம்... அதுவல்லவோ சுவை... அதுவல்லவோ கை மணம்..'
'ம்.. இதென்ன புதுக்கதையா இருக்கு... அவ செஞ்சது நல்லாயில்லன்னு நீங்க திட்டினதா இல்ல சொல்லிக்கிட்டு இருந்தா... '
'ஸ்ரீ. இங்க வந்து உங்க அப்பாவ என்னன்னு கேளு' என்று உள்ளறையில் இருந்த ஸ்ரீமதியைக் கூப்பிட..
'டேய்.. நான் எங்கடா உன்ன திட்டினேன்... '
'பின்ன.. நான் செஞ்சதையெல்லாம் .. அம்மா செய்யற மாதிரியே இருக்குன்னு சொன்னியேப்பா... உனக்குத்தான் அம்மா செய்யறதே பிடிக்காதே...
Read more...