கோலங்கள்...
December 30, 2009
நோ.. இது முடிஞ்சு போன கோலங்கள் தொடரை பத்தின பதிவு இல்லை..
நிஜமான கோலங்கள் பத்தின பதிவு... ஏன்னா இது மார்கழி மாசமாச்சே.. (மார்கழி மாசம் முடியவே போகுதேன்னு ல்லாம் சொல்லப்படாது...)
மார்கழின்னாலே கோலம் தான்.. அதுவும் பெரிய பெரிய கோலம். நெளி கோலமோ, design கோலமோ, இல்ல ரங்கோலியோ.. எல்லாம் பெருசு பெருசா தான் போடணும்... அதுவும் design கோலம், ரங்கோலின்னா ஜாலிதான்.. அப்பத்தான் கலர் கலரா போடலாம். நெளி கோலம் கொஞ்சம் கஷ்ட்டம். ஏன்னா, ஒரு புள்ளி தப்பா போனாலும் சரியா வராது.. சட்டுன்னு போடறதுக்கு ரங்கோலி தான் என் சாய்ஸ்....
இதுல ரோம்ப இம்பார்ட்டன்ட் என்னன்னா.. கலர் பொடி மிக்ஸ் பண்றது தான்... ஏன்னா கடையில வாங்கற பொடி தூவறதுக்கு சரியா இருக்காது.. ஸோ.. மணல் கொஞ்சம், கோல மாவு கொஞ்சம்ன்னு மிக்ஸ் பண்ணா கரெக்ட்டா வரும்.. அப்படி மிக்ஸ் பண்றப்போ, இந்த அடர் கலர் மாற்றது பாக்க சூப்பராயிருக்கும்...
layout design போட்டதுக்கு அப்பறம், காம்பினேஷன் பாத்து கலர் குடுத்து, கொஞ்சம் கூட பிசிறில்லாம outline போட்டதுக்கு அப்பறம் பாத்தா, நாம நினைச்ச டிசைன் வந்திருக்கும்.. அப்ப அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.. இப்படி finishingல்லாம் நல்லா இருந்தாலும், opening தான் நல்லா இருக்காது ...
ஏன்னா கோலம் போட காலைல நடுராத்திரி 4.30 க்கே எந்திரிக்கணும்.. அதாவது விடியக் காலைல 5 மணிக்கே கோலம் போட ஆரம்பிச்சுடணும் ... 5.30 மணிக்கு போட்டால் கொசுக்கள் படையெடுத்து வந்து நம்மை கடிக்கும் அபாயம் இருப்பதாலும், 6 மணிக்கு போட்டால் வீட்டில் உள்ளோர் நம்மையே கடித்துக் குதறிவிடும் அபாயம் இருப்பதாலும் வேறு வழியே இல்லை...
இருந்தாலும் நான் ஒரு நாள் கோலம் போட்டால், வருடம் முழுவதும் போட்டதாய் அர்த்தம்ன்னு சொல்லி, இன்னிக்கி ஒரு நாள் நான் போட்ட கோலம் தான் இது..
இது போன வருஷம் போட்டது... (போட்டோவுக்கு போஸ்ல்லாம் இல்ல.. நானே போட்டது... )
நான் இன்னிக்கு ஒரு நாள் கஷ்ட்டப்பட்டு கோலம் போட்டறேன், மீதி நாள்ல்லாம் (வருஷம் முழுக்க) அதே மாதிரி போட்டுடு என்று பெருந்தன்மையாக அம்மாவிடம் சொல்லிவிட்டேன்....
எப்பூடி...!!!!!